குறைந்த வருவாய் குடும்பங்களை ஊக்குவிக்க புத்தாண்டு கேளிக்கை
- Tamil Murasu
- Dec 31, 2022
- 1 min read
Updated: Feb 21, 2024
வாடகை வீடுகளில் வசிக்கின்ற கிட்டத்தட்ட 100 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து அவற்றை ஊக்குவிக்க கம்போங்-கெம்பாங் சமூக மன்றத்தில் நேற்று கேளிக்கை நிகழ்ச்சி நடந்தது.
அத்தகைய குடும்பங்களுக்குத் தேவையான பொருள்களும் பற்றுச்சீட்டுகளும் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டன.
'ஹோப் இனிஷியேடிவ் அலெயன்சஸ்' என்ற சமூக அமைப்பின் 'தி அல்ஃபாபட் புரொஜெக்ட்' என்ற செயல்திட்டத்தையொட்டி நடந்த அந்தக் கேளிக்கை நிகழ்ச்சியில் மந்திரக் காட்சி, ஆடல், பாடல், அதிர்ஷ்டக் குலுக்கு போன்ற பலவும் இடம்பெற்றன.
Comments